
கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் திறக்கப்படமால் இருக்கும் நிலையில் தமிழக அரசு இதுதொடர்பாக விளக்கமளித்துள்ளது.
கொரேனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த 3 மாதங்களாக திறக்கப்படமால் உள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறாமல் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கல்வியாண்டுக்கான பள்ளிகள் எப்போது திறக்கும் என்பது குறித்த தகவல் இல்லாததால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என தமிழக அரசு மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது.
பள்ளிகள் திறப்பது குறித்து அனைத்து மாநில அரசுகளுடன் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடத்திய ஆலோசனையில், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த முடிவெடுக்கவில்லை என்று தமிழக அரசு தனது கருத்தை தெரவித்துள்ளது.
No comments:
Post a Comment