We Give Everything First

Sunday, July 19, 2020

எந்த மாதம் பள்ளிகளை திறக்கலாம்? – மக்களிடம் கேட்கும் மத்திய அரசு!




கொரோனா பாதிப்புகள் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலாய் பள்ளிகள் செயல்படாமல் உள்ள நிலையில் மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான பாடங்களை பள்ளிகள்  ஆன்லைன் மூலமாகவே நடத்தி வருகின்றன. 


இந்நிலையில் பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்து மத்திய மனித வளத்துறை அமைச்சகம் மக்களின் கருத்துகளை கேட்டுள்ளது.



மத்திய அரசு ஆகஸ்ட், செப்டம்பர் அல்லது அக்டோபர் இந்த மூன்று மாதங்களுள் ஏதாவது ஒன்றில் பள்ளிகளை திறக்க உத்தேசித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் எந்த மாதத்தில் திறக்கலாம் என்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்திய மனிதவள அமைச்சகத்திற்கு இமெயில் மூலமாக 20 தேதிக்குள், அதாவது நாளைக்குள் கருத்து தெரிவிக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment