யூனிலீவர் நிறுவனம், தனது அழகு கிரீமான, ஃபேர் & லவ்லி-யின் பெயரை ‘க்ளோ & லவ்லி’ என்று மாற்றியுள்ளது.

அமெரிக்காவில் கருப்பினத்துக்கு எதிராக மாபெரும் போராட்டம் வெடித்ததை தொடர்ந்து, நாடு முழுவதும் இனவெறிக்கு எதிரான மனப்பான்மை எழ தொடங்கியது.
இதையடுத்து பிரபல யூனிலீவர் நிறுவனத்தில் அழகு சாதன தயாரிப்புகளில் பிரபலமானதும், கிட்டதட்ட 45 வருடங்களாக பெரும்பாலான இந்திய பெண்களால் இன்றியமையாது உபயோகிக்கப்பட்டு வந்த ஃபேர் & லவ்லி கிரீமின் பெயரை மற்ற யூனிலீவர் நிறுவனம் முடிவு செய்தது.
சிவப்பு அழகு என்றும் கருப்பு அழகற்றது என்றும் பொருள்படும் வகையில் அதன் பெயர் இருந்ததால் இந்த முடிவை யூனிலீவர் நிறுவனம் எடுத்திருந்தது.
இந்த நிலையில் தற்போது ஃபேர் & லவ்லி என்னும் பெயரை க்ளோ & லவ்லி என மாற்றியுள்ளது.
No comments:
Post a Comment