We Give Everything First

Monday, August 3, 2020

வாட்ஸ் ஆப்: இந்த அப்டேட்டை கவனியுங்க… பெரிய தொல்லை இனி இல்லை!




நமது குடும்பம், கல்லூரி, ஆபிஸ் போன்ற வாட்ஸ்அப் குருப்பீல்  இருந்து  அவ்வபோது வரும் மெசேஜ் நோட்டிபிகேஷன்  இருந்து  நம்மை விடுவித்துக் கொள்ளும் ஒரு அம்சத்தை வாட்ஸ்அப் செயல்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது,  நோட்டிபிகேஷனை 8 மணிநேரம், ஒரு வாரம், ஓராண்டுக்கு  மியூட் செய்யும் வசதி உள்ளது. 


இந்த வசதியை, வாட்ஸ்அப் தற்போது விரிவுபடுத்தியுள்ளது.  “Mute Always” (மியூட் ஆல்வேஸ் ) அம்சம் மூலம்  தேவையில்லாத நபர்களிடம் இருந்தோ, குரூப்களிடமிருந்தோ வரும் நோட்டிபிகேஷனை  மியூட் செய்யலாம்.


Whatsapp Update: வாட்ஸ்அப் அப்டேடில் என்ன எதிர்பார்க்கலாம் 


மியூட் ஆல்வேஸ் அம்சம் தற்போது பீட்டா வெர்சன் பரிசோதனையில் உள்ளது.  வாட்ஸ்அப் 2.20.197.3 அப்டேடில்,  நோட்டிபிகேஷன் மியூட் செய்யும் வசதியில், ஓராண்டிற்கு  பதிலாக நிரந்தரமாக என்று புதிய அம்சம் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.


நாம் மியூட் செய்த பிறகு, குரூப்களில் இருந்து வரும் தகவலை  பெறலாம், படிக்கலாம்.  ஆனால் ஒவ்வொரு முறையும் மெசஜ் வரும் பொழுது, நமது ஸ்மார்ட்போனில் நோட்டிபிகேஷன் வராது


அடுத்த அப்டேடில்  ஏராளமான புதிய ஈமோஜிகள் இடம்பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, 138 வண்ணமயமான  ஈமோஜிகளை நாம் காணலாம்.


இதற்கிடையே, வாட்ஸ் ஆப் பல சாதன ஆதரவை (multiple device support) பல மாதங்களாக சோதித்து வருகிறது. இயக்கப்பட்டதும், ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்களில் பயனர்கள் தங்கள் வாட்ஸ் ஆப் கணக்கில் உள்நுழைய இந்த அம்சம் அனுமதிக்கும். தற்போது பயனர்கள் தங்கள் வாட்ஸ் ஆப் கணக்கில் ஒரே ஒரு சாதனத்தில் மட்டும்தான் உள்நுழைய முடியும். அதே கணக்கு மற்றொரு சாதனத்தில் உள்நுழைந்ததும் (logged into), அது தானாகவே முதல் சாதனத்திலிருந்து வெளியேறி (logs out) விடும்.


டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும்  ‘வாட்ஸ்அப் பே’ சேவைக்கும் இன்னும் இந்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை.


இந்தியாவில், தற்போது சோதனை வடிவில் இருக்கும் இந்த சேவை, பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் கணக்கிலிருந்து மற்றொரு வாட்ஸ்அப் கணக்கிற்கு யுபிஐ பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்த அனுமதிக்கிறது. இந்த செயலி நடைமுறைக்கு வந்ததும், வாட்ஸ்அப்-ல் இருந்தவாறே, தங்கள் அருகில் இருக்கும் மளிகை கடைகளில், பொருட்களை ஆர்டர் செய்யலாம்.

No comments:

Post a Comment