கொரோனா பிடியில் இருந்து தற்காத்துக் கொள்ள முககவசம் அணியுமாறு தனது பயணர்களுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் நினைவூட்டி வருகிறது.

கொரோனாவின் பிடியில் இருந்து தப்பிக்க முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக்கின் தலைமையிடமான அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது. ஆனாலும் மக்கள் முககவசம் அணியாமல் அலட்சியமாக சுற்றித்திரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் சமூக பொறுப்புடணும், தொற்றின் தாக்கத்தில் இருந்து தனது பயணர்களை பாதுகாக்கும் முயற்சியாகவும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் தலைப்பு பகுதியில் முககவசம் அணியுமாறு நினைவூட்டும் குறியீடு ஒன்றை ஃபேஸ்புக் அமைத்துள்ளது.
இதனால் ஒவ்வொரு முறையும் மக்கள் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு செல்லும் போதும் முககவசம் அணிவது குறித்து நினைவூட்டல் வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment