கோவை அரசு கலைக் கல்லூரியில், இளநிலைப் பட்டப் படிப்புகளில் சேர 20-ம் தேதி முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி முதல்வர் க.சித்ரா தெரிவித்துள்ளார்.
கோவை அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், பாதுகாப்பியல், சுற்றுலாவியல், அரசியல் அறிவியல், பி.எஸ்சி. கணிதம், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், உளவியல், புவியியல், பி.காம்., பி.காம். சிஏ., பிபிஏ உள்ளிட்ட 21 இளநிலை பட்டப் படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இப்படிப்புகளில் 2020-2021 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்காக இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கோவை அரசு கலைக் கல்லூரி முதல்வர் க.சித்ரா வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ''இக்கல்லூரியில் நடத்தப்பட்டு வரும் இளநிலைப் பட்டப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், http://tngasa.in, http://tndceonline.org ஆகிய இணையதளங்கள் வழியாக வரும் 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
மேலும், கரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழக அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு காலத்தில், இளநிலை பட்டப்படிப்பு விண்ணப்பம் தொடர்பாக மாணவர்கள் மற்றும் பெற்றோர் யாரும் கல்லூரிக்கு நேரில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது'' எனத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment