We Give Everything First

Sunday, July 19, 2020

இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் ஆக.5 முதல் ஆன்லைன் நுழைவு தேர்வு




நாட்டின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான இந்துஸ்தான் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் நிறுவனம் (HITS), கரோனா தடுப்பு நடவடிக்கைகளின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக திட்டம் ஒன்றை அறிவித்திருக்கிறது.


அதன்படி, கரோனா தடுப்புப் பணியின்போது உயிர்நீத்த பணியாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த நபருக்கு முழு கட்டண விலக்குடன் கல்வி பயிலும் வசதி செய்து தரப்படும். இத்திட்டத்தின்கீழ் பயன்பெறுபவர்களுக்கு இலவச தங்குமிட வசதியும் கல்வி உதவித் தொகையும் அளிக்கப்படும்.


மேலும், கரோனா தடுப்புப் பணியில் முன்னணியில் நின்று செயல்படும் மற்றும் அந்த பணியின்போது உயிரிழந்த மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், அரசு அதிகாரிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும். சிறந்த மாணவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் மற்றும் விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.


மேலும், வரும் ஆகஸ்ட் 5 முதல் 7-ம் தேதி வரை பி.டெக், பி.ஆர்க் மற்றும் பி.டெஸ். படிப்புகளுக்கான ஆன்லைன் நுழைவுத் தேர்வு (HITSEEE 2020) நடத்தப்பட உள்ளது. இதற்கு www.hindustanuniv.ac.in என்ற இணைய முகவரியில் ஜூலை 31-ம் தேதிக்குள் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் தேர்வு மதிப்பெண், பிளஸ் 2 கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment