We Give Everything First

Saturday, June 20, 2020

ஏ.டி.எம் இயந்திரங்கள் எப்படி செயல்படுகின்றன தெரியுமா?




ஏ.டி.எம் நம் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு தயாரானாலும் ஏ.டி.எம் மெஷினின் தேவை தவிர்க்கமுடியாதது. 

ஏ.டி.எம் இயந்திரமானது முதன் முதலாக 1967-ம் ஆண்டு லண்டனில் உள்ள பார்கலேஸ் வங்கியால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் 1987-ம் ஆண்டுதான் ஹெச்.எஸ்.பி.சி வங்கி மும்பையில் இந்தியாவின் முதல் ஏ.டி.எம் இயந்திரத்தை அறிமுகம் செய்தது.

 அதுவரை வங்கிகளுக்கு நேரடியாக சென்று தங்களது வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை படிவம் பூர்த்தி செய்து பெற்றுக்கொண்டிருந்தனர் மக்கள். 


ஏ.டி.எம்-மின் பரவல், மக்கள் பணம் எடுக்கும் முறையை எளிமையாக்கியது. ஒரு தெருவுக்கு இரண்டு, மூன்று ஏ.டி.எம் இயந்திரங்கள்கூட நிறுவப்பட்டன. இது அறிவியலினால் சாத்தியப்பட்ட மிகப்பெரிய தொழில்நுட்ப வளர்ச்சி. 

இந்தியாவில் 2,00,000-க்கும் மேற்பட்ட ஏ.டி.ஏம்-கள் உள்ளன. இந்த ஏ.டி.எம் களில் மொத்தமாக எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட வேன்கள் தினமும் பணம் நிரப்பிச் செல்கின்றன. ஒரு நாளில் எல்லா ஏ.டி.எம் சேவை வழங்கும் நிறுவனங்களாலும் 60,000 முதல் 70,000 ஏ.டி.எம்-களுக்கு பணம் செலுத்த முடியும்.


இது அந்தந்த வங்கிகளினுடைய ஊழியர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தது. ஏ.டி.எம்-மில் பணம் செலுத்த வரும் வாகனங்களில் எப்போதும் பாதுகாவலர்கள் துப்பாக்கியை ஏந்தியபடியே இருப்பர்.

 பணத்துக்கு இவ்வளவு பாதுகாப்பு வழங்கப்பட்டாலும் இந்தியாவில் ஏ.டி.எம் கொள்ளைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. சில இடங்களில் ஏ.டி.எம்மிற்குப் பதிலாக பணம் டெபாசிட் செய்யும் இயந்திரத்தை தவறுதலாக தூக்கிச் சென்ற சம்பவங்கள் கூட உண்டு. 


கடந்த 2019-ம் ஆண்டு முதல் எல்லா ஏ.டி.எம்-களிலும் சிப் கார்ட் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் மூலம் `மாக்னடிக் ஸ்டிரிப்' கொண்ட இஎம்வி கார்டாக இருந்தால் மட்டும்தான் உங்களால் ஏ.டி.எம்மை பயன்படுத்த முடியும்.


பாதுகாப்பு காரணங்களுக்காவே இந்த சிப் கார்ட் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் பணம் எடுக்கும் வரை உங்கள் ஏ.டி.எம் கார்டானது இயந்திரத்திலேயே இருக்கும். பணம் எடுத்த பின்தான் கார்டையும் உங்களால் எடுக்க முடியும். 

மனிதனின் நேரத்தை மிச்சப்படுத்தவே ஏ.டி.எம்-கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் பின்பும் பண மதிப்பிழப்பிற்கு பிறகு ஏ.டி.எம் வாசலில் நின்ற கூட்டத்தை நாம் அனைவரும் பார்த்திருப்போம். இதையடுத்து மொபைல் ஏ.டி.எம்-களும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை நாளுக்கு நாள் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு மக்கள் வசதிக்காக மாறிக்கொண்டே இருக்கும்.


இன்று மனிதனிடம் எப்போதும் வேண்டுமானாலும் பணம் கையிருப்பில் இருப்பதற்கு மிக முக்கிய காரணம் ஏ.டி.எம்-களே. `ஏ.டி.எம்-களில் ஒரு நாளைக்கு எவ்வளவு பணம் லோடு செய்யப்படும்... ஏ.டி.எம்-மிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை வங்கிகள் எவ்வாறு ஈடு செய்யும்? என அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் தாமஸ் பிராங்கோவிடம் பேசினோம். 


``இந்தியாவில் பல வகையான ஏ.டி.எம்-கள் உள்ளன. ஒவ்வோர் ஏ.டி.எம்-மிலும் பணம் லோடு செய்வதற்கான அளவு மாறுபடும். பொதுவாக சில ஏ.டி.எம்-களில் 40,00,000 லட்சம் வரை லோடு செய்யலாம். ஒரு வேளை ஏ.டி.எம்-மில் பணம் கொள்ளையடிக்கப்பட்டால் வங்கிகள் காப்பீடு தொகையை சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனங்களிடம் கோரும். அதன் மூலம் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை உடனடியாக ஈடு செய்யும் " என்றார்

No comments:

Post a Comment