
சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ஆர்.சினிவாசன், அனைத்து இணைப்பு கல் லூரி முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
2020-21-ம் கல்வி ஆண்டுக் கான அனைத்து இளநிலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை செப்டம்பர் 10-ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண் டும். இளநிலை பட்டப்படிப்பில் 2, 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும், முது நிலை பட்டப்படிப்பில் 2-ம் ஆண்டு பயிலும் மாணவர் களுக்கும் ஆகஸ்ட் 3-ம் தேதி இணைய வகுப்புகளை தொடங்க வேண்டும்.
எனவே இணையவழி கற் பித்தலை மேற்கொள்ள பேராசிரியர்கள் தயாராக இருக்க வேண்டும். அதற்கு தேவை யான தகவல் தொழில்நுட்ப வசதிகளை கல்லூரி நிர்வாகம் ஆசிரியர்களுக்கு செய்துதர வேண்டும்.
முதலாமாண்டு மாண வர்களுக்கான இணைய வழி வகுப்புகள் ஆகஸ்ட் 19-ம் தேதி தொடங்கப்படும்.
எனவே,மாண வர்கள் கல் லூரிகளில் அளித்த செல் போன் எண், மின்னஞ்சல் முகவரியை பாதுகாப்பாக வைக்க வேண்டும். மாணவர் களின் இணையதள வகுப்பு களில் கலந்துகொண்ட வருகைப்பதிவு விவரங்களை அந்தந்த துறைகளில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment