
அரசு கலை, அறிவியல் கல்லூரி களில் நாளை (ஆகஸ்ட் 3) முதல் இணைய வகுப்புகளைத் தொடங்க கல்லூரி கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
அனைத்து அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இணைய வகுப்புகளை நாளை (ஆக.3) முதல் தொடங்க வேண்டும். இணையதள வசதியில்லாத மாணவர்களுக்கு வாட்ஸ்ஆப் செயலி வழியாக அல்லது கல்லூரி இணையதளத்தில் பாடங்களை பதிவேற்றம் செய்து வழங்க வழி வகை செய்ய வேண்டும்.
இதுதவிர துறைத் தலைவர் கள், வகுப்புகளுக்கான காலஅட்ட வணை, பாடம் தயாரித்தல் மற்றும் மாணவர்களின் வருகைப்பதிவு குறித்து முறையான திட்டமிடு தலை முதல்வரின் ஆலோசனை யின்படி மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து மாணவர்களும் இணைய வகுப்புகளில் பங்கேற் பதை உறுதிசெய்ய வேண்டும். இதுதொடர்பாக மேற்கொள்ளப் பட்ட நடவடிக்கை விவரங்களை அறிக்கையாக மண்டல இணை இயக்குநருக்கு அனுப்ப வேண் டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
No comments:
Post a Comment