
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பிளஸ் - 1 தேர்வில் 95.30 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகராட்சி கல்வித் துறையின் கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் 2019-20 கல்வியாண்டில் 4,895 பேர் பிளஸ் - 1 தேர்வு எழுதினர். இவர்களில் 4,665 மாணவ, மாணவியர்கள் (95.30 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இது 1.78 சதவீதம் கூடுதலாகும்.
நெசப்பாக்கம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, லாயிட்ஸ் ரோடு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, ஆழ்வார்பேட்டை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மற்றும் சி.ஐ.டி.நகர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆகிய 4 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி வழங்கியுள்ளன. பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆணையர் கோ.பிரகாஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment