சென்னை மாநகராட்சி சார்பில் ஆழ்வார் பேட்டையில் இயங்கி வரும் சமுதாயக் கல்லூரியில் நடத்தப்படும் பல்வேறு படிப்புகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் வெளி யிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநக ராட்சியுடன் ரோட்டரி சங்கம் (கிழக்கு) இணைந்து ஆழ்வார்பேட்டையில் சமுதாயக் கல்லூரி செயல்படுகிறது. இக்கல்லூரியில் சுகாதார உதவியாளர், அறுவை சிகிச்சைக்கூட உதவியாளர் உள்ளிட்ட பட்டயப் படிப்புகள் பயிற்று விக்கப்படுகின்றன.
15 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்ட, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 9840393630 என்ற கைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment