
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தற்போதைக்கு மாணவர் சேர்க்கை நடைபெறாது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணைக்கட்டு பகுதியில் ரூ.2.70 கோடி மதிப்பீட்டில் அடிப்படை வசதிகள் மற்றும் அணுகு சாலை மேம்பாட்டுப் பணிகளை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து புதன்கிழமை தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கொடிவேரி அணையை சுற்றுலாத் தலமாக மாற்ற நிதி ஒதுக்கப்பட்டு தற்போது பணிகள் தொடங்கியுள்ளன.
கரோனா தொற்று காரணமாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தற்போதைக்கு மாணவர் சேர்க்கை நடைபெறாது.
பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களின் கருத்துகளைக்கேட்டு பின்பு முடிவு எடுக்கப்படும். பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மதிப்பெண் கள் முறையிலா அல்லது கிரேடு முறையிலா என்பது குறித்து முடிவுகள் வெளியிட்ட பின்பு தெரிந்து கொள்வீர்கள் என்றார்.
No comments:
Post a Comment