We Give Everything First

Thursday, July 30, 2020

பொறியியல் கலந்தாய்வுக்கு நாளைமுதல் சான்றிதழ் பதிவேற்றம்



பொறியியல் கலந்தாய்வுக்கு, வெள்ளிக்கிழமை (ஜூலை 31) முதல் சான்றிதழ் பதிவேற்றம் செய்யலாம் என உயர்கல் வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு, இதுவரை ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 8 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் 93 ஆயிரத்து 383 பேர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தியிருக்கின்றனர்.


கரோனா தொற்றில் இருந்து மாணவர்களை பாதுகாக்க மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் சான்றிதழ் பதிவேற்றம் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.


ஜூலை 31-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் அடுத்த மாதம் 20-ஆம் தேதி வரை சான்றிதழ் பதிவேற்றம் நடைபெற உள்ளது. ஒவ் வொரு 2 நாள்களுக்கும் 20 ஆயிரம் பேர் பதிவேற்றம் செய்வதற்கு ஏதுவாக வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.tneaonline.org என்ற இணையதளத்தையோ அல்லது 044 22351014, 22351015 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம். 


இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட சான்றிதழ்களை அனுபவம் வாய்ந்த பேராசிரியர் கள் மூலம் ஆகஸ்ட் 24-ஆம் தேதி முதல் செப்டம்பர் 1-ஆம் தேதி வரை சரிபார்க்கப்படும். மாணவர்கள் நேரில் வரவேண்டிய அவசி யம் இல்லை. சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்ததும் தரவரிசைப் பட்டி யல் வெளியிடப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment