முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான இறுதி ஆண்டுத் தேர்வுகள் கடந்த மே மாதம் நடைபெற்றிருக்க வேண் டும். கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருந்ததால், தேர்வுகளை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மாணவர்கள் கரோனா சிகிச்சைப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தேர்வுகளை உடனே நடத்துமாறு மாணவர்கள் தரப்பில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து, ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதி முதல் தேர்வுகளை நடத்த பல்கலைக்கழகம் முடிவு செய்திருந்தது. இதற்கு, மருத்துவக் கல்வி இயக்குநரகம் ஆட்சேபம் தெரிவித்தது. அதனால், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வுகளை தள்ளிவைப்பதாக சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. தற்போது, முதுநிலை பல் மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வுகளையும் பல்கலைக்கழகம் தள்ளிவைத்துள்ளது.
No comments:
Post a Comment