We Give Everything First

Friday, July 24, 2020

ஆகஸ்ட் முதல் தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்




ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த நம்பியூரில் ரூ.2 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: 


நாட்டிலேயே முதன்முதலாக தொலைக்காட்சி சேனல்கள் மூலம் தமிழக மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் முதல் 14 தொலைக்காட்சி சேனல்கள் வாயிலாக பாடங்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பு மற்றும் பாடங்கள் குறித்து 18 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அக்குழுவின் அறிக்கை தயார் நிலையில் உள்ளது. அவற்றை செயல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. 


பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் மறு கூட்டலுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இம்முறையானது தனிமைப்படுத் தப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கும் பொருந்தும். தமிழ்நாட்டில் இதுவரை 52 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது, என்றார்.

No comments:

Post a Comment