
கரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு பல்க லைக்கழக இறுதி ஆண்டுத் தேர்வை ரத்து செய்யக் கோரி மகாராஷ்டி ரத்தை ஆளும் சிவசேனையின் இளைஞர் அமைப்பானயுவசேனை உச் சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.
கரோனா பொது முடக்கத்தைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக் கானத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அதுபோல, கல்லூரி மாண வர்களுக்கான தேர்வுகளும் முழுமையாக ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வு களை மாநிலங்கள் கட்டாயம் நடத்த வேண்டும் என்று யுஜிசி அண் மையில் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியது.
யுஜிசி-யின் இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று மகாராஷ்டிரம், தமிழகம் உள்ளிட்டபல்வேறுமாநிலங்கள் கோரிக்கை விடுத்தன. ஆனால், அதையுஜிசி ஏற்கவில்லை .
இந்நிலையில், பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வை ரத்து செய் யக் கோரி மகாராஷ்டிர சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலாத் துறை அமைச் சர் ஆதித்ய தாக்கரே தலைமையில் செயல்படும் சிவசேனையின் இளை ஞர் அமைப்பான யுவசேனை உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.
இந்நிலையில், பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வை ரத்து செய் யக் கோரி மகாராஷ்டிர சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலாத் துறை அமைச் சர் ஆதித்ய தாக்கரே தலைமையில் செயல்படும் சிவசேனையின் இளை ஞர் அமைப்பான யுவசேனை உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.
இதுகுறித்து யுவசேனை செயலர் வருண் சர்தேசாய் கூறியதாவது: கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
பல மாநிலங்கள் பொது முடக்கத்தை மேலும் நீட்டித்துள்ளன. அதிக எண்ணிக்கையி லான மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்கவேண்டும் என உலக சுகாதார அமைப்பும் (டபிள்யூ.ஹெச்.ஓ.) கேட்டுக்கொண்டுள்ளது. இந்தச் சூழலில் மகாராஷ்டிரம் மட்டுமின்றி மேலும் 7 மாநிலங்களும் பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வுகளை ஏற்கெனவே ரத்து செய்து விட்டன.
இந்தச்சூழலில் இறுதியாண்டு தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும் என யுஜிசி வலியுறுத்தியதற்கு எதிராக யுவசேனை சார்பில் உச்சநீதிமன்றத்தில் சனிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது என்று அவர் கூறினார்.
No comments:
Post a Comment