
10-ம் வகுப்பு தனித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
கோபி அருகே கொடிவேரி அணையில் பாசனத்துக்காக தண் ணீர் திறக்கும் நிகழ்ச்சியில் பங் கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாசனப்பகுதியில் சாகு படிக்குத் தேவையான உரங்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் தனி யாரிடம் இருப்பு உள்ளது. கீழ் பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கத் தேவையான நிதி விரைவில் ஒதுக்கப்படும்.
தமிழகத்தில் இந்த ஆண்டு கூடுதலாக உணவுப் பொருள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மாணவர் தற்கொலை நடக்கக் கூடாது என்பதில் அரசு உறுதி யாக உள்ளது. 10-ம் வகுப்பு தனித்தேர்வு எழுதும் மாணவர்க ளுக்கு தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment