
புதிய கல்விக் கொள்கை தொடர் பாக மாணவர்கள், ஆசிரியர்களி டம் விழிப்புணர்வு ஏற்படுத்த கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தர விட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு செயலர் ரஜினிஷ் ஜெயின், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
நாடு முழுவதும் ‘புதிய கல்விக் கொள்கை - 2020’ அமல்படுத்தப் பட்டுள்ளது. இதையடுத்து கல்விக் கொள்கையின் அம்சங்கள் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள், பேராசிரியர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டும்.
அதன்படி நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளும் சமூக வலைதளங்கள் மூலமும், ஊடகங்கள் வாயிலாகவும் விழிப்புணர்வு பிரச்சாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், இணையவழியில் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி கல்விக் கொள்கை தொடர்பான தகவல்களைப் பரப்ப வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக மேற் கொள்ளப்பட்ட பணி விவர அறிக் கையை யுஜிசிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment