We Give Everything First

Sunday, August 2, 2020

பள்ளிக் கல்வி துறையிடம் 32 லட்சம் முகக் கவசங்கள் ஒப்படைப்பு சமூகநலத் துறை வழங்கியது



சமூகநலத் துறை சார்பில் 32 லட்சம் முகக் கவசங்கள் தயாரிக்கப்பட்டு பள்ளிக்கல்வித் துறை யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


சுகாதாரத் துறை சார்பில், சில மாதங்களுக்கு முன்பு 17 லட் சம் முகக் கவசங்கள் தயாரித்து தருமாறு சமூகநலத் துறையிடம் கேட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 17 லட்சம் முகக் கவசங்கள் தயாரித்து தரப்பட்டன.


இதேபோல், 2 மாதங்களுக்கு முன்பு பள்ளிக்கல்வித் துறை சார் பில் 47 லட்சம் முகக் கவசங்கள் தயாரித்து தருமாறு கோரப்பட் டது. மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக 32 லட்சம் முகக் கவசங்கள் தயா ரித்து பள்ளிக்கல்வித் துறை யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


இதுதொடர்பாக, சமூகநலத் துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, “மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 32 லட்சம் முகக் கவசங்களை தயா ரித்து பள்ளிக்கல்வித் துறையிடம் ஒப்படைத்துள்ளோம். இதுவரை சுகாதாரத் துறைக்கு அளித்த 17 லட்சத்தையும் சேர்த்து 49 லட் சம் முகக் கவசங்கள் ஒப்படைக் கப்பட்டுள்ளன’’ என்றார்.

No comments:

Post a Comment