We Give Everything First

Sunday, August 2, 2020

தமிழகத்தில் 7-ம் கட்ட ஊரடங்கு தொடங்கியது இன்று தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்



தமிழகத்தில் 7-ம் கட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வு களுடன் தொடங்கியுள்ளது. அதே நேரத்தில், இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத் தப்படுகிறது.


தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகை யில் 7-ம் கட்டமாக ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படு வதாக முதல்வர் பழனிசாமி அறி வித்தார். அதன்படி, 7-ம் கட்ட ஊரடங்கு நேற்று முதல் (ஆக.1) அமலாகியுள்ளது. இதில், முந்தைய ஊரடங்கை காட்டிலும் சில தளர்வுகள் கூடுதலாக அறி விக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தேநீர் கடைகள், உணவகங்களில் காலை 6 முதல் இரவு 7 மணி வரை 50 சதவீதம் பேர் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


இதுதவிர, மளிகை, இறைச்சிக் கடைகள் காலை 6 முதல் இரவு 7 மணி வரையும், இதர கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரையும் இயங்க அனு மதிக்கப்பட்டுள்ளது.


மேலும், சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட தனியார் நிறுவனங் களில் 75 சதவீத பணியாளர்கள் பணியாற்ற அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.


மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத் தும் வகையில் கடந்த மாதத் தைப் போல் ஆகஸ்ட் மாதத் திலும் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக் கப்பட்டுள்ளது. அதன்படி இந்த மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையான இன்று எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.


பால் விநியோகம், மருத்துவ மனை, மருந்தகங்கள், மருத்துவ மனை வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மட்டும் இன்று இயங்க அனுமதிக்கப்படும். மருத் துவ அவசரங்களுக்காக மட்டும் தனியார் வாகனங்கள் அனுமதிக் கப்படும். தற்போது சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி, கண்காணிப்பை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட காவல் துறையினருக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


முகக்கவசம் அணியாதவர் கள், தேவையின்றி வெளியில் சுற்றுபவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கவும் போலீ ஸாருக்கு அறிவுறுத்தப்பட்டு உள் ளது. இதையடுத்து, போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.


டாஸ்மாக் மூடல்

கடந்த மாதம் போலவே இந்த மாதமும் தளர்வில்லா ஊரடங்கு அமல்படுத்தப்படும் நாட்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்காது என அறி விக்கப்பட்டுள்ளது. இதனால், நேற்று டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.

No comments:

Post a Comment