
ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட 22 நிறு வனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க ஆர்வமாக உள்ளதாக மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரி வித்தார். அடுத்த 5 ஆண்டுகளில் இந்த நிறுவனங்கள் மேற்கொள்ள உள்ள முதலீடு ரூ.11 லட்சம் கோடி என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் கூறிய தாவது:
இந்தியாவில் மொபைல் போன் உற்பத்தியை தொடங்கும் நிறு வனங்களுக்காக மத்திய அரசு ரூ.41 ஆயிரம் கோடியை உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகையாக ஒதுக்கி யுள்ளது. இந்த சலுகையைப் பெற இந்நிறுவனங்கள் ஆர்வமுடன் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வந்துள்ளன. இதன்மூலம் 12 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும். இதில் 3 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 9 லட்சம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
மிகப் பெரிய அளவில் செல் போன் உற்பத்திக்காக ரூ.11 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. இதில் ரூ.7 லட்சம் கோடி வேலை வாய்ப்பை உருவாக் கும் விதமாக அமையும். இது வரை 22 நிறுவனங்கள் இத்திட் டத்தின் கீழ் உற்பத்தியைத் தொடங்க விண்ணப்பித்துள்ளன. தைவான், தென் கொரியா, ஜெர்மனி, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இதில் அடங்கும்.
உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகையை பெற விரும்பும் வெளி நாட்டு நிறுவனங்கள், ரூ.15 ஆயிரம் மற்றும் அதற்கு அதிகமான விலை கொண்ட ஸ்மார்ட்போன்களை தயாரிக்க வேண்டும். இந்த பிரிவின் கீழ் சாம்சங், ஃபாக்ஸ்கான், ரைஸிங் ஸ்டார், விஸ்ட்ரோன், பெகட்ரோன் ஆகிய நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. இதில் ஃபாக்ஸ்கான், விஸ்ட்ரோன், பெகட் ரோன் ஆகியவை ஆப்பிள் நிறு வனத்துக்கு ஒப்பந்த அடிப் படையில் ஸ்மார்ட்போன் தயாரித்து தரும் நிறுவனங்களாகும்.
இந்திய நிறுவனங்களுக்கு விலை நிர்ணய அளவுகோல் எதுவும் கிடையாது. இத்திட்டத் தின்கீழ் சீன நிறுவனங்கள் எதுவும் விண்ணப்பிக்கவில்லை. இத்துறை மூலம் உடனடியாக ரூ.1 லட்சம் கோடி முதலீடு கிடைக்கும் என அரசு எதிர்பார்க்கிறது. இதன்மூலம் 2025-ல் இத்துறையின் உற்பத்தி வருவாய் ரூ.10 லட்சம் கோடியை தொடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்
No comments:
Post a Comment