
செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி கூறியதாவது:
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் வரும் திங்கள்கிழமை (நாளை) முதல் 2 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச பாடநூல் மற்றும் புத்தகப் பைகள் வழங்கப்படும். இவற்றை வாங்க வரும் மாணவர்களும் பெற்றோரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருக்கும் மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நாட்கள் முடிந்தபிறகு, அவர்களை பள்ளிக்கு அழைத்து பாடநூல்கள் வழங்கப்படும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment