We Give Everything First

Sunday, July 5, 2020

வாட்ஸ்அப்: `QR கோடு கான்டக்ட் சேவிங், அனிமேடட் ஸ்டிக்கர்ஸ்’ -வருகிறது புதிய அப்டேட்



வாட்ஸ்அப்பில் சில புதிய அம்சங்கள் அடுத்த சில வாரங்களில் வரவுள்ளன. இப்போது வரவுள்ள புதிய அப்டேட்கள் அனைத்தும் இந்தியாவிலும் உடனுக்குடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதில் QR கோடு கான்டக்ட் சேவிங் , அனிமேடட் ஸ்டிக்கர்ஸ் போன்ற வசதிகள் ஏற்கெனவே பீட்டா வெர்ஷன்களில் கிடைக்கத்தொடங்கியுள்ளன. இதனுடன் க்ரூப் வீடியோ கால், வாட்ஸ்அப் வெப்பிற்கான டார்க் மோடு வசதி, KaiOs போன்களுக்கான ஸ்டேடஸ் அப்டேட் வசதி என மற்ற வசதிகளும் வரவுள்ளன. 


இந்த அனிமேடட் ஸ்டிக்கர்ஸ் வசதியானது டெலிகிராமில் ஏற்கெனவே இருப்பதுதான். இப்போது வரை வாட்ஸ்அப்பில், ஏற்கெனவே உள்ள ஸ்டிக்கர்களையும், சில செயலிகள் மூலம் (3rd party app) வெளியிலிருந்து ஸ்டிக்கர்களை பதிவிறக்கிப் பயன்படுத்தலாம். 


அதே போல் இந்த அனிமேடட் ஸ்டிக்கர்ஸும் வாட்ஸ்அப்பிலில் இடம்பெற்றிருக்கும். மேலும் வெளியிலிருந்தும் இந்த அனிமேடட் ஸ்டிக்கர்ஸ் உருவாக்கி வாட்ஸ்அப்பில் பயன்படுத்தலாம். இந்த புதிய அப்டேட்டில் வாட்ஸ்அப் வெப்பிலும் டார்க் மோடு வருகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த டார்க் மோடு வசதியானது இந்த ஆண்டு தொடக்கத்தில் தான் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆப்களுக்கு வந்தது.


நாம் வாட்ஸ்அப் வெப்பை பயன்படுத்தும் போது எப்படி QR கோடை ஸ்கான் செய்து பயன்படுத்துகிறோமோ, அதே போல் இனி இன்னொருவரின் கான்டக்ட்டையும் ஸ்கேன் செய்து பதிந்து கொள்ள முடியும். இப்போது வரவுள்ள அப்டேட்டில் நீங்கள் க்ரூப் வீடியோ காலில் இருக்கும் போது ஒரு நபரின் விடியோவை மட்டும் உங்களால் பெரிதுபடுத்தி முழுமையாக பார்க்க முடியும்.


ஏற்கெனவே வாட்ஸ்அப் க்ரூப் கால் நபர்களின் உச்ச வரம்பானது நான்கிலிருந்து எட்டாக சமீபத்தில்தான் அதிகரிக்கப்பட்டது. இப்போது வரவுள்ள அப்டேட்டில் எட்டு நபர்களுக்கும் குறைவாக உள்ள வாட்ஸ்அப் க்ரூப்களில், நேரடியாக க்ரூப் வீடியோவுக்கு செல்ல கால் ஐகான் வரவுள்ளது


ஜியோ போன் போன்ற பேசிக் போன்கள் சிலவற்றின் இயங்குதளமான KaiOS-க்கு கடந்த வருடம்தான் வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது வரை இந்த இயங்குதளத்தில் வாட்ஸ்அப் மூலம் மெசேஜ்களும், வாய்ஸ் நோட்களும் மட்டுமே அனுப்ப முடியும். இப்போது வரவுள்ள புதிய அப்டேட்டில் ஸ்டேடஸும் அவர்களால் வைக்க முடியும்.

No comments:

Post a Comment