ஜோதிடர் பதில்கள்...!!
1. ஆடி 18 அன்று வீடு கிரகப்பிரவேசம் செய்யலாமா?
🌟 ஆடி மாதம் வீடு கிரகப்பிரவேசம் செய்வதை தவிர்க்கவும்.
2. இறந்தவர் என்னுடன் பேசுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
3. மாம்பழத்தை கனவில் கண்டால் என்ன பலன்?
🌟 மாம்பழத்தை கனவில் கண்டால் அதிர்ஷ்டமான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
4. மிருகங்களுடன் சண்டை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தொழில் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த இன்னல்கள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.
5. வெள்ளை நிற ஆடையை அணிந்து இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் காரியங்களில் எண்ணிய வெற்றி கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.
6. நகையை அடகு வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 நகையை அடகு வைப்பது போல் கனவு கண்டால் நீண்ட நாள் நிலுவையில் இருந்துவந்த சொத்து விற்பனைகள் சாதகமாக அமையும் என்பதைக் குறிக்கின்றது.
7. விருந்திற்காக காய்கறிகளை வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 இந்த மாதிரி கனவு கண்டால் பெரியோர்களின் ஆலோசனைகள் மூலம் மனதில் தெளிவு பிறக்கும் என்பதைக் குறிக்கின்றது.
8. மலை ஏறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 மலை ஏறுவது போல் கனவு கண்டால் செய்யும் முயற்சிகளுக்கு உண்டான பலன்கள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.
No comments:
Post a Comment