
ராமநாதபுரத்தில் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கமான திருமணமான பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்திரித்து மிரட்டி பணம் பறித்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கீழக்கரையைச் சேர்ந்த பெண் ஒருவர் தான் பாதிக்கப்பட்டது தொடர்பாக காவல்துறை கண்காணிப்பாளரிடம் தொலைபேசியில் புகார் அளித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் தன்னுடைய புகைப்படத்தை பெற்று அதனை ஆபாசமாக மார்பிங் செய்த ஒரு கும்பல் அதனை இணையதளத்தில் வெளியிடுவோம் என பணம் கேட்டு மிரட்டுவதாக எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து அந்த பெண் அளித்த தகவலின் பேரில் இன்ஸ்டாகிராம் கணக்கை ஆய்வு செய்த போலீசார் ஜாசம் கனி, பைசல் ஆகிய இருவரை கைது செய்தனர்.
No comments:
Post a Comment