முறையாக திட்டமிடாததால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி தங்கம் தென்னரசு, திமுக முன்னாள் அமைச்சர்
தமிழகத்தில் கடந்த 10 வருடங்களாக கல்வித்துறையில் புதியதாகவும், முக்கியத்துவமாகவும், மாணவர்களுக்கு பயனுடையதாகவும் எந்தவித புதிய மாற்றங்களையும் அரசு கொண்டு வரவில்லை . எல்லாம் வெறும் அறி விப்புகளின் தோரணங்களாகவே இருக்கிறது. எந்த அறிவிப்புகளும் எந்தவிதமான முறையான திட்டமி டலோ ஆராய்ந்து தெளிந்து எடுத்த நடவடிக்கைகளாகவோ இல்லை.
வெறுமனே அந்த நேரத்திற்காக, எதையும் யோசிக்காமல் செய்வது, ஊடகங்களுக்கு தெரிவிப்பது, அந்த அறிவிப்புகளுக்கு எதிர்ப்பு வரும் போது, அதனை ரத்து செய்வது. இதுதான் பள்ளிக்கல்விதுறையின் பொதுவான வேலையாகவே இருக் கிறது.
முக்கியமாக, பள்ளிக்கல்வித் துறை மாநில அரசுகளின் உரிமை களை மத்திய அரசுக்கு அடகு வைக் ககூடிய சூழ்நிலையில் வந்துள்ளது. மாநில அரசு பள்ளிகளை மூடக் கூடிய செயல், 5,8ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு வைப்பதாகவந்த அறி விப்பு, புதிய கல்வி கொள்கையை ஆதரிக்க கூடிய நிலை என அனைத் திலும் முழுக்க முழுக்க மாநில உரிமைகளை விட்டு கொடுக்கும் நிலைக்கு பள்ளி கல்வித்துறை வந்து விட்டது. இதில் முக்கியமான ஒன்று நீட் தேர்வுக்கு நம் மாணவர்களை பலியாக்கியது.
இந்த பள்ளிக்கல் வித்துறை எந்த ஒரு விஷயத் தையும், கல்வியுடன் சம்பந்தப்பட்ட மாணவர் கள், பெற்றோர்கள், ஆசிரியர்களை கலந்து ஆலோசனை செய்வதில்லை. கல்வியை பொறுத்தவரை எதிலுமே தெளிவான முடிவுகள், அறிவுப்புகள் பள்ளிக்கல்வித்துறையில் இல்லை.
சமீபத்தில், கொரோனா உச்சத் தில் இருக்கும் நேரத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவோம் என்பது, பின்னர் எதிர்கட்சி தலை வர் ஸ்டாலின் உள்ளிட்டோரின் எதிர்ப்புகளை அடுத்து அதனை ரத்து செய்வது, முதலில் பிறர் என்ன சொல்வது, நாம் என்ன கேட்பது என்பதுபோல் வீம்பு பிடிப்பது, எல்லாம் இந்த பள்ளிக்கல்வித்துறையில் உள்ளது. இதேபோல் இந்த முறை பாடத்திட்டங்களை மாற்றுவது, அதற்கு பிரச்னை வந்த பிறகு மறுப் பது, எல்லாமே மாணவர்களை குழப்பத்திற்கு மாற்றக்கூடிய செய லாகத்தான் உள்ளது.
ஒரே குழப்பத்தில் மாநில பள் ளிக்கல்வித்துறை உள்ளது. குறிப் பாக ஆன்லைன் வகுப்பு எடுத்தால் நடவடிக்கை என்றார்கள், பிறகு . அமைச்சரே ஆன்லைன் வகுப் புக்கு வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்படும் என்றார். பின்னர் . ஆன்லைன் வகுப்பு எடுக்க போகி றோம் என்றார், உடனே ஆன்லைன் இல்லை, தொலைக்காட்சி மூல மாக வகுப்பு என்றார், அதுவும் 5 தொலைக்காட்சி என்றார், பின்னர் 10 என்றார், பின்னர் 14 என்றார். அப் படி என்னதான் முதல்வர் துவக்கி வைத்தார் என்று பார்த்தால் கடந்த வருடம் தொடக்கி வைத்ததை தற்போது துவக்கியுள்ளார்.
சரி அது, எத்தனை பேரை சேர்ந்தது என்று பார்த்தால் 1 லட்சத்து 85 ஆயிரம் தான் சென்றடைந்துள்ளது. மேலும் அட்டவணைப்படி தொலைக்காட் சிகளில் வரவில்லை . அரசுக்கே எல்லாமே குழப்பம்.
தற்போது நோய் தொற்று காலம், இந்த நிலையில் கல்வி ஆண்டின் பாடத்திட்டதை குறைத்திருக்க வேண்டும். சிபிஎஸ்இ குறைத்திருக்கிறார்கள், அவர்கள் திருக்குறள் மற்றும் சில முக்கிய பாடங்களை நீக்கி விட்டனர். காமராஜர், கலைஞர் காலத்தில் இருந்து பல பள்ளிகள் திறக்கப்பட்டது.
தற்போது நோய் தொற்று காலம், இந்த நிலையில் கல்வி ஆண்டின் பாடத்திட்டதை குறைத்திருக்க வேண்டும். சிபிஎஸ்இ குறைத்திருக்கிறார்கள், அவர்கள் திருக்குறள் மற்றும் சில முக்கிய பாடங்களை நீக்கி விட்டனர். காமராஜர், கலைஞர் காலத்தில் இருந்து பல பள்ளிகள் திறக்கப்பட்டது.
ஆனால் இந்த அரசு - தொடக்க பள்ளிகளை மத்திய அர த் சின் அழுத்தத்திற்கு பயந்து மூடி உள்ளது. அரசு எதையுமே ஆராய்ந்து, ம் அறிவிப்புகளை தெரிவிப்பதில்லை . அவசர கோலத்தில் அறிவிக்கின்றனர். இந்த அரசில் பள்ளிக்கல்வித் துறை சீரழிந்துள்ளது. வீம்புக்கு 12ம் வகுப்பு தேர்வு வைத்ததால் பல மாணவர்கள் தேர்வு எழுதாமல் உள்ளனர்.
மறுதேர்வுக்கும் 34 ஆயிரம் மாணவர்களில் 200க்கு மேற்பட்டோர்தான் முன்வந்துள்ளனர். பள்ளிக்கல்வித்துறையின் நடவடிக்கை எதிர்கால சந்ததிகளுக்கு " உதவும் வகையில் இருக்கவேண்டும். அதில் குழப்பினால் மாணவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும்.
No comments:
Post a Comment