கல்வித்திட்டத்தை உரிய வகையில் மாற்றினால் குளறுபடிகள் தீரும்- ம.ராசேந்திரன், தஞ்சைப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர்.
கல்வி என்பது மாணவரின் 3வது கண்ணைத் திறப்பது.அதாவது நெற்றிக்கண்ணை அல்ல, அறிவுக் கண்ணை திறப்பது. அந்த கல்வியை கற்பிக்கும் இடம், என்ன பாடம் கற்பிக்கப்படுகிறது, கற்பிக்கும் ஆசிரியர், கற்பிக்கும் முறைகள், தேர்வு முறைகள் கட்ட மைக்கப்படுகிறது. நாட்டுக்கு மாண வர்கள் ஆற்றவேண்டிய தேவை என்னவோ அவற்றை அவர்கள் செய்வதற்கான கல்வியை கற்பிக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகளின் கையில் தான் கல்வி இருக்கிறது.
மத்திய, மாநில அரசுகளின் கையில் தான் கல்வி இருக்கிறது.
அதை அந்த அரசுகள், மக்களுக்கு அளிக்க வேண்டுமே ஒழிய தங்கள் நலனுக்காக பயன்படுத்த கூடாது. மக்களுக்கு கல்வியை வழங்க வேண்டியவர்களே என்ன வகை யில் கல்வியை கொடுக்க வேண்டும் என்பதையும் முடிவு செய்யும் அதி காரத்தையும் வைத்துள்ளனர்.
நாட்டு நலனுக்காக இருக்க வேண்டிய கல்வி வணிக மயமாக மாறியுள்ளது. கடந்த 10 ஆண்டுக ளில் தமிழகத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. பள்ளிக்கல் வித்துறையில் பல்வேறு மாற்றங்கள், குழப்பமான நிலை உள்ளது.
தற்போது தகவல் தொழில்நுட் பத்துறையும் வளர்ந்து விட்டது. அதற்கேற்ப கல்வித் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். கல் வியை வணிகப் பொருளாக மாற் றி விட்ட கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கான கல்வியை பயிற்றுவிக்காமல், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஏற்ற பணியா ளர்களை உருவாக்கிக் கொடுக்கும் தொழிற்சாலைகளாக மாறியுள்ளன.
அதன் விளைவுதான் புதிய கல் விக் கொள்கை, நீட் போன்றவை வந்தன. மேலும் பள்ளிகளில் ஆசி ரியர்களை நியமிப்பதில் தொடங்கி, பாடநூல் தயாரிப்பது என்று எல் லாவற்றிலும் குளறுபடிகள் ஏற்பட் டுள்ளன. இப்போது புதிய பாடத் திட்டம் என்பதில் குளறுபடி, தேர்வுமுறையில் குளறுபடி என்று எல்லாவற்றிலும் குளறுபடிகள் தான், இதனால் மாணவர்கள் பெரிதும் குழம்பிப் போய் உள்ளனர்.
நீட் என்ற புதிய திட்டம் வந்த தால் மக்கள் குழம்பியுள்ளனர். இத னால் கல்வியில் பெரிய அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது. கல்வி வளர்ச்சி என்பது இல்லை. இதுபோன்ற பிரச் னைகள் உலக அளவில் ஏற்படும் போது உலக நாடுகளில் இதை எப் படி எதிர்கொள்கிறார்கள் என்பதை இங்குள்ளவர்கள் ஆய்வு செய்ய வேண்டும். சிறந்த கல்வி நிறுவ னங்களுக்கு சுதந்திரம் வழங்க வேண்டும். மத்திய, மாநில அர சுகள் கல்வியில் தன்னாட்சியை கொண்டு வர வேண்டும்.
இங்கு அப்படி இல்லை. வெளி நாட்டு தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ற வகையில் மாணவர்களுக்கு கல்வியை திணித்து வரும் நிலை உள்ளது. தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த காரணத்தால் எந்த இடத்தில் இருந்தும் பணியாற்றும் நிலை இன்று உருவாகியுள்ளது. இதை உணர்ந்து மாறி வரும் சூழ லுக்கு ஏற்ப கல்வியை தர வேண்டும். அப்போதுதான் மாணவர்களுக்கும், நாட்டுக்கும் பயனுள்ளதாக இருக்கும். அதை விட்டு மொழி போன்ற திணிக்கும் சிக்கல்களை உருவாக்கக் கூடாது.
புதிய பாடத்திட்டம் என்ற பெயரில் புதிய செய்திகளையும் திணித்தல் கூடாது. வெளிநாடுக ளில் உள்ளது போல கல்விக்காக தனியாக வல்லுநர் குழுக்களை உரு வாக்க வேண்டும். என்ன பாடத் திட்டம் தேவை என்பதை அந்த குழுக்கள் தீர்மானிக்கும் வகையில் விட்டுவிட வேண்டும். இதுபோன்ற விஷயங்கள் ஆசிரியர்களால்தான் முடியும்.
தொல்காப்பியத்தில், 32 உத்தி கள் குறித்து கூறப்பட்டுள்ளது. அதில் வந்தது, கொண்டுவராதது உரைத்தல் என்பது ஒரு உத்தி. இதன்படி பழைய கல்விமுறையை வைத்துக் கொண்டு இனி வரும் காலத்தில் கல்வியில் என்ன தேவை என்பதை உணர்ந்து கல்வியில் மாற்றங்கள் செய்ய வேண் டும். அப்படிச் செய்தால் தான் கல்வியில் உள்ள குள றுபடிகள் தீர வாய்ப்புள்ளது.
No comments:
Post a Comment