We Give Everything First

Monday, July 20, 2020

அமைச்சர்கள் மாறினாலும் கல்வியில் முன்னேற்றம் இல்லை: மார்ட்டின் கென்னடி

அமைச்சர்கள் மாறினாலும் கல்வியில் முன்னேற்றம் இல்லை:மார்ட்டின் கென்னடி,
தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு தலைவர்



ல்வித்துறையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் சமச்சீர் கல்வி கொண்டுவரப்பட்டது. அதற்காக அமைக்கப்பட்ட குழுவில் தனி யார் பள்ளிகளின் சார்பிலும் சிலர் இடம்பெற்றனர். அப்போது எங் கள் தரப்பில் 67 பக்கம் கொண்ட பரிந்துரையை அப்போதைய முதல்வர் கலைஞரிடம் கொடுத்தோம்.

 அதில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளை முதல்வர் பரிசீலித் தார். அதற்கு பின்புவந்த ஆட்சியில் சமச்சீர் புத்தகங்களை மாற்றியது, வரிசையாக அமைச்சர்களை மாற்றி யது, முதன்மைச்செயலாளர்களை மாற்றியது, இயக்குநர்களை மாற்றி யது, பாடத்திட்டத்தை மாற்றியது என்று பல மாற்றங்கள் நடந்தாலும் மாணவர்கள் கல்வியில் மாற்றம் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை , இதுதான் தமிழகத்தில் இன்று உள்ள கல்வியின் நிலை.


இப்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பள்ளிக்கல்வித்து றையில் முடிவு எடுப்பதில் பல குழப் பங்களை நாம் பார்க்க முடிகிறது. இந்த குழப்பத்துக்கு இடையே புதிய பாடத்திட்டம் ஒன்றும் கொண்டு வரப்பட்டது. இது சிபிஎஸ்இபாடத் திட்டத்துக்கு இணையானது என்று கல்வித்துறை கூறி வருகிறது. அப்படி இருக்கும் போது, கடந்த 3 ஆண்டுகதுளில் பிளஸ் 2 தேர்வு எழுதுவோரின் த எண்ணிக்கை ஏன் குறைந்தது..


இந்நிலையில் தான், சிபிஎஸ்இ  பள்ளிகளை நோக்கி மாணவர்கள்  படையெடுக்கும் நிலை ஏற்பட் - டுள்ளது. எம்பிபிஸ், பிடிஎஸ் படிப்து புகளில் சேர வேண்டும் என்றால்  சிபிஎஸ்இ தான் படிக்க வேண்டும்  என்பதும், நீட் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் சிபிஎஸ்இ பாடங்களில் இருந்துதான் கேட்கப்படுகின் க றன என்ற வதந்தியும் தான் சிபிஎஸ்இ டு மோகம் வளர காரணம். ஆகவே  நமது கல்வித்திட்டம் குறித்தும் நாம் ஐ ஆய்வு செய்ய வேண்டும். சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்தால்தான் மருத்துவராக முடியும் என்ற சித்தாந்தத்தை மாற்ற வேண்டும். 


புதிய பாடத்திட்டங்களை கொண்டு வந் தாலும், மேனிலைக் கல்வி படிக்கும் மாணவ, மாணவியரின் எண்ணிக் கையை கணக்கில் கொண்டு, மருத் துவத்துறை மற்றும் நீட், ஜெஇஇ போன்ற தேர்வுகளை எழுதும் மாணவர்களை கணக்கெடுத்து அதை அடிப்படையாக கொண்டு பிளஸ் 1, பிளஸ்2 பாடத்திட்டங் களை ஏ, பி என்று பிரிக்க வேண் டும். அதில் ஏ பிரிவு என்பது பாடத் திட்டத்தில் எம்பிபிஎஸ், ஜெஇஇ, - ஐஐடி, நீட் போன்ற போட்டித் - தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 5 மட்டும் என்று அறிவிக்க வேண்டும்.



கோவா,மகாராஷ் டிராவில் உள்ள பாடத் திட்டங்கள் போல கணக்கு, இயற்பியல், வேதி யியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களை சிபிஎஸ்இபாடத்திட் டத்தில் உள்ளதை அப்படியே கடை பிடிக்கின்றனர். அதேபோல, தமிழ கத்திலும் கடைபிடிக்க வேண்டும். இதனால் மாணவர்கள் போட்டித் தேர்வில் வெல்ல முடியும். அதே போல, 3, 5, 8ம் வகுப்புகளுக்கு தேர்வு என்று முதலில் அறிவித்தனர். 

பின்னர் இல்லை என்று அறிவித்தனர். இதுபோன்ற குழப்பத்துடன் கூடிய அறிவிப்புகள் மாணவர்களை அச்சு றுத்துகின்றன. இதுபோன்ற கல்விமு றைகள் யாரையோதிருப்திப்படுத்த கொண்டு வரப்படுகின்றதோ என்ற சந்தேகம் மக்களுக்கு எழுகிறது.


இதுமட்டுமல்லாமல், பள்ளிக் கல்வித்துறைக்கு தற்போது தேவை யாக இருப்பது ஓராண்டுத் திட்டம். இதற்காக ஒரு வல்லுநர் குழுவை அமைக்க வேண்டும். அதில் சிபி எஸ்இ, ஐசிஎஸ்இ, மெட்ரிக் பள் ளிகள், நர்சரி, பிரைமரி பள்ளிகள், பிளே ஸ்கூல்ஸ் ஆகியவற்றுடன் அரசு நடுநிலைப்பள்ளி, உயர்நி லைப் பள்ளி, மேனிலைப் பள்ளி, நிதியுதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களை கொண்டு குழுவை அமைத்து அந்த குழுவின் ஆலோச னைகள், ஏற்று ஆண்டுத் திட்டம் உருவாக்க வேண்டும்.


அந்த திட்டத்தை ஒட்டியே அறிவிப்புகள் ஒவ்வொரு மாதமும்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆணையிட வேண்டும். இப்படி செய்தால் குழப் பங்கள் தீரும். தமிழக கல்வித்துறை யும் மறுமலர்ச்சிபெறும். இன்றைய தேவை தரமான கல்வி, வளமான தமிழகம்தான்.

No comments:

Post a Comment