We Give Everything First

Sunday, July 5, 2020

ஜி.டி.நாயுடுவிற்கும், தந்தை பெரியாருக்கும் இடையே நடந்த போட்டி.. வென்றது யார்?

ஜி.டி.நாயுடுவிற்கும், தந்தை பெரியாருக்கும் இடையே நடந்த போட்டி..!!

👚 ஜி.டி.நாயுடு அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் நெருங்கிய நண்பர் ஆவார். உரிமையோடு தந்தை பெரியாருடன் நகைச்சுவையோடு உரையாடக்கூடியவர். ஒருமுறை தந்தை பெரியார் கண்காட்சியை திறந்து வைப்பதற்காக கோவை நகருக்கு வந்தார்.


👚 அந்த சமயம் தீபாவளி பண்டிகை நேரம். தீபாவளி விழா வந்தால் ஜி.டி.நாயுடு அவர்கள், கண்ணம்பாளையம் மில் வேட்டிகளை தான் வாங்குவது வழக்கம். அந்த வேட்டி கோயம்புத்தூர் மக்களிடையே அவ்வளவு புகழ் பெற்றதாக அப்போது விளங்கியது.

👚 தந்தை பெரியார் அப்போது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு காங்கிரஸ் பேரவை தலைவராக இருந்தார். அவர் கதர் துணிகளை, அதுவும் கைராட்டையில் நூற்ற நூல்களைக் கொண்டு நெய்யப்பட்ட கதராடைகளைத்தான் அணிவார்.

👚 தீபாவளி நேரமல்லவா? தந்தை பெரியார் கோவை நகர் கண்காட்சியை திறந்து வைக்கவும், விழா முடிந்ததும் தீபாவளி விழாவிற்கான கதராடைகளை வாங்கவும் எண்ணினார்.
கதர் சிறந்ததா? மில் துணி சிறந்ததா?

👚 ஜி.டி. நாயுடுவும் - தந்தை பெரியாரும் சந்தித்து பேசிக் கொண்டிருந்த நேரத்தில், இருவருக்கும் பேச்சுவாக்கில் ஒரு போட்டி எழுந்தது. அதாவது, மில் வேட்டி சிறந்ததா? கதர் சிறந்ததா? என்பதை பற்றி நாம் விவாதம் செய்ய வேண்டும் என்று ஜி.டி.நாயுடு பெரியாரை கேட்டு கொண்டார்.

👚 அதற்கு பெரியார் அவர்கள் 'என்ன நாயுடு பந்தயம்?" என்றார். அதற்கு நாயுடு, 'நான் உமது வாதத்தில் தோற்றால், கதர் கட்டிக்கொள்கிறேன். நீங்கள் தோற்றுவிட்டால் ஒன்பது முழம் மில் வேட்டியைக் கட்டிக் கொண்டு வந்து, கண்காட்சி சாலையை திறந்து வைக்க வேண்டும். சம்மதமா?" என்றார்.

👚 இருவரின் வாதம் நீண்ட நேரம் நடந்தது? இரத்தின சபாபதி என்பவர் இந்த விவாதத்தை கவனித்து வந்தார். வாதம் அனலானது! இறுதியில் தந்தை பெரியார் அவர்களே, தான் தோற்றுவிட்டதை பலர் முன்னிலையில் ஒப்புக்கொண்டார்.




👚 ஜி.டி.நாயுடு அவர்கள் எடுத்து கொடுத்த மில் வேட்டியை தந்தை பெரியார் கட்டிக்கொண்டு ஜி.டி.நாயுடுவுடன் கண்காட்சி சாலையை திறந்து வைக்க சென்றார். கண்காட்சிக்கு உள்ளே பெரியார் காலடி வைத்ததும், 'இந்த வாத போட்டியில் வெற்றி எனக்குத்தான்" என்று தந்தை பெரியார் பெருமையோடும், பெருமிதத்தோடும் கூறியதை கேட்ட ஜி.டி.நாயுடு அவர்கள் அதிர்ச்சி அடைந்து, 'அது எப்படி?" என்று கேட்டார்.

👚 'எனக்கு இனாமாக மில் வேட்டி கிடைத்தது அல்லவா?" என்று தந்தை பெரியார் மகிழ்ச்சி பொங்க கூறினார். அவர் கூறியதை சிரித்து கொண்டே கேட்டு கொண்டிருந்த விஞ்ஞான மேதை ஜி.டி.நாயுடு அவர்கள், 'இருந்தாலும் பெரியார் பெரியார்தான்" என்றார்...!

No comments:

Post a Comment