அதிகாரிகளின் ஆலோசனையால் அலைக்கழிக்கப்படும் மாணவர்கள்: ஆர்.எத்திராஜுலு, முன்னாள் மாநிலத் தலைவர், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம்
அண்மையில் பாடத்திட்டத்தை குறைப்பதற்காக அரசு 16 பேர் கொண்ட ஒரு குழு அமைத்தது. அதில் 12 பேர் அதிகாரிகள். மீதி 4 பேர் சிபிஎஸ்இபள்ளிகளை சேர்ந்தவர்கள், அதில் ஒருவர்கூட அரசு பள்ளியை சேர்ந்த ஆசிரியர்களோ, தலைமை ஆசிரியர்களோ, பெற்றோர்களோகிடையாது. சிபிஎஸ்இ பள்ளியை நிர்வகிக்க கூடியவர்கள் தான் உள்ளனர். குழுவில் உள்ள ஒரு வருக்கும் அரசு பள்ளிகள் குறித்து ஏதும் தெரியாது.
இது மாதிரியான ஒரு குழு அளிக்கும் அறிக்கைகள் எப்படி அரசு பள்ளி மாணவர்க ளுக்கு பயனுள்ளதாக இருக்கும். கல்வியை நம்பியுள்ள மாணவர்க ளுக்கு நியாயத்தை வழங்க முடியும். இதுபோன்று அரசின் பல்வேறு செயல்கள் உள்ளன.
இந்தியாவிலேயே எங்கும் 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கிடையாது. தமிழகத்தில்தான் முத லில் அறிவிக்கப்பட்டது. இது பல ருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெற்றோர்கள் பலர் எதிர்ப்பு தெரி வித்தனர். இதை தொடர்ந்து அரசு அந்த முடிவை கைவிட்டது.
இதே போல், கொரோனா பாதிப்பு அதிகரித்துவந்த நிலையில், பரவல் உச்சத்தில் இருந்த நிலையில், இந்த ஆண்டிற்கான 10ம் பொதுத்தேர்வு பெரும்பாலான ஆசிரியர் இயக்கங்கள் தள்ளிவைக்க வேண் டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் ரத்து கூட செய்ய சொல்ல வில்லை . இவை எதையும் அரசு ஏற் காமல் நாங்கள் நடத்தியே தீருவோம் என்று அதற்கான பணிகளை அரசு செய்து வந்தது. பணிகள் பெருமளவு மேற்கொள்ளப்பட்ட பின்னர், தேர் வுகள் ரத்து செய்யப்படுவதாக அறி விக்கப்பட்டது. அந்த அறிவிப்பிலும் இதுவரை தனிதேர்வர்களின் நிலை என்னவென்று அரசு தெளிவாக அறிவிக்கவில்லை.
மற்ற மாணவர்கள் வெற்றி பெற் றவர்கள் என்று அறிவிக்கப்பட்ட தால், தனித்தேர்வர்களையும் அறி விக்க வேண்டும். சரி தேர்வுதான் இப்படியென்றால், வெற்றி அறிவிப் பிலும் சிக்கல் உள்ளது.
காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்களை வைத்து முழு ஆண்டு மதிப்பெண் கள் வழங்குவது பெரும் பாதிப்பு ஏற்படுத்தும்.இதேபோல், 12ம் வகுப்பு தேர்வு முதன்முறையாக புதிய பாடத்திட் டத்தின் கீழ் நடந்தது. நாம் பாடத்திட் டத்தில் அதிகம் வேண்டும் என்று அதிக பாடங்களை கொண்டு வந்துவிட்டோம்.
இது மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இத னால் 95 சதவீத மதிப்பெண் சி.பி. எஸ்.இ மாணவர்கள் 1000 பேரும், அரசு பள்ளி மாணவர்கள் 100 பேரும் எடுத்துள்ளனர்.
இதனால் கால்நடை கல்லூரி, அரசு இன்ஜி னியரிங் உட்பட அனைத்து இடங்க ளும் சி.பி.எஸ்.இமாணவர்களுக்கே செல்லும், ஏற்கனவே இதுபோன்று பிரச்னை வரும்போது சி.பி.எஸ்.இ மற்றும் அரசு பள்ளி மாணவர்களின் சதவீதத்தை வைத்து 98சதவீத இடம் அரசு பள்ளி மாணவர்களுக்கும், 2 சதவிகித இடம் சி.பி.எஸ்.இ மாண வர்களுக்கும் கலைஞர் கொண்டு வந்தார். அதன்படி அண்ணா பல்கலைகழகம் வழங்கியது.
எனவே இந்த வருடம் இது மாதிரி ஏதேனும் செய்தால் மட்டுமே நமது அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்லூரியில் இடம் கிடைக்கும். இதனால் 95 சதவீதம் இடம் அரசு பள்ளி மாணவர்களுக்கும், 5 சதவீத இடம் சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கும் வழங்க வேண்டும். அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்தாண்டு பல்வேறு பிரச்னைகள் இருந்தது. கேள்வித்தாள்களும் கடினமாக இருந்தது. புதிய பாடத்திட்டம் பளு, கொரோனாபீதி இதுபோன்ற ம் காரணங்களால் அரசு பள்ளி மாணவர்களின் மதிப்பெண்கள் குறைந்கதது.
எனவே இந்த வருடம் சதவிகிதப்படி இடம் இல்லையென்றால் அரசு பள்ளி மாணவர்களுக்கு கலை - அறிவியல் கல்லூரியில் கூட இடம் கிடைக்காது. ' தற்போது மாணவர்களின் கல்வியை பொறுத்தவரை அரசிடம் , சரியான திட்டமிடல் இல்லை ,கல்வியாளர்கள் யாரையும் கலந்து யோசிப்பதில்லை . அனுபவம் பெற்றயாருமே இல்லாமல் வெறும் அதிகாரிகளை வைத்து முடிவெடுத்தால் 4 அரசு மட்டுமில்லாமல், மாணவர்களுக்கும் பல்வேறு சிக்கல்கள் உண்டாகும். இதனால் மாணவர்கள் - 3 மற்றும் பெற்றோர்களின் நிலை கேள்விக்குறியாகும்.
No comments:
Post a Comment