
தனியார் வேளாண் கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தை நிர்ணயிப்பது தொடர்பாக மாணவர்கள் தங்கள் கருத்துகளை தபால் மூலம் தெரி விக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் 20-க்கும் மேற்பட்ட தனியார் வேளாண் கல்லூரிகள் செயல்படு கின்றன. இவற்றில் 2020-21-ம் ஆண்டின் கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்ய ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட் டுள்ளது.
தபால் மூலம் அனுப்பலாம்
தற்போது ஊரடங்கால் மாண வர்கள், பெற்றோர், கல்வியாளர் களிடம் நேரில் கருத்துகளைப் பெற இயலாத சூழல் உள்ளது. இதன்காரணமாக தபால் மூலம் கருத்துகளைப் பெற கல்விக் கட்டண நிர்ணயக் குழு முடிவு செய்துள்ளது. அதன்படி கோவை வேளாண் பல்கலை. தலைவர் எம்.கல்யாணசுந்தரத்தின் முகவரிக்கு ஆகஸ்ட் 13-க்குள் தபால் மூலம் கருத்துகளை அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment