
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 மறுதேர்வு நேற்று நடந்தது.
கடந்த மார்ச் 2 முதல் 24-ம் தேதி வரை நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில் கடைசி நாள் தேர்வை 34,482 பேர் எழுதவில்லை. இவர்களுக்கு ஜூலை 27-ம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என்று அரசு தேர்வுத் துறை அறிவித்தது. ஆனால், அவர்களில் 846 பேர் மட்டுமே மறுதேர்வில் பங்கேற்க விருப்பம் தெரிவித்தனர். அதில் 175 பேர் பள்ளி மாணவர்கள், எஞ்சிய 671 பேர் தனித்தேர்வர்கள்.
இந்நிலையில், பிளஸ் 2 மறு தேர்வு 21 மையங்களில் நேற்று நடந்தது. தேர்வு எழுத விருப்பம் தெரிவித்திருந்தவர்களில் 327 பேர் வரவில்லை. 519 பேர் மட்டுமே எழுதினர். விடைத்தாள் கள் இன்று (ஜூலை 28) மதிப் பீடு செய்யப்படும். தேர்வு முடிவு ஆகஸ்ட் முதல் வாரம் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத் துறையினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment