We Give Everything First

Tuesday, July 28, 2020

தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கை சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு



தொலைதூரக் கல்வியில் இணையவழி மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 


சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி நிறுவனத்தில் 2020-21-ம் கல்வி ஆண்டுக்கான இளங்கலை, முதுகலை (எம்பிஏஉட்பட), டிப்ளமோ, முதுகலை டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகளுக்கான (யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்டவை) மாணவர் சேர்க்கை இணையவழி மூலம் தொடங்கியுள்ளது. 


விருப்பமுள்ள மாணவர்கள் www.online.ideunom.ac.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம். இத்தகவலை, பல்கலைக்கழக பதிவாளர் இராம.சீனுவாசன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment