கோவை மண்டல வேலை வாய்ப்பு இணை இயக்குநர் ஆ.லதா கூறியது:
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார் பில், தமிழ்நாட்டில் வேலை தேடும் இளைஞர்களையும், வேலை அளிக்கும் தனி யார் துறை நிறுவனங்களை யும் இணையதளம் வழி யாக இணைத்து, வேலை வாய்ப்புகளை பெற்றுத் தரும் நோக்கில், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் கடந்த மாதம் 16-ம் தேதி தொடங்கப்பட்டது.
தனியார் துறையில் பணியாற்ற விரும்பும் இளை ஞர்கள், இந்த இணைய தளத்தில் நேரடியாக பதிவு செய்து தங்களுக்கு ஏற்ற பணி வாய்ப்பு பெறலாம்.
தனியார் துறை நிறு வனங்கள் தங்கள் நிறுவனத் தில் உள்ள காலிப் பணியிடங் கள், அதற்கான தகுதி, சம் பளம் ஆகியவற்றை இதில் பதிவேற்றம் செய்யலாம். கட்டணமின்றி இந்த சேவை வழங்கப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் இந்த இணையதளத்தில் 418 தனியார் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. சுமார் 5,600 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கரோனா காலத் தில் வேலைதேடும் பலருக்கு இந்த வசதி பயனுள்ளதாக உள்ளது. இவ்வாறு லதா தெரிவித்தார்.
No comments:
Post a Comment