We Give Everything First

Sunday, July 26, 2020

நீட் தேர்வு திணிப்பை தடுத்து நிறுத்த வேண்டும் தமிழக அரசுக்கு கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்



மத்திய பாஜக அரசின் நீட் தேர்வு திணிப்பை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து அவர் நேற்று வெளி யிட்ட அறிக்கையில் கூறியிருப் பதாவது:
தமிழகத்தில் நீட் தேர்வு நடத்துவதன் மூலமாக ஒடுக்கப் பட்ட, பிற்படுத்தப்பட்ட கிராமப் புற மாணவர்கள் பாதிக்கப்படுவார் கள். தமிழக அரசு பள்ளி மாணவர் கள் நீட் தேர்வில் வெற்றி பெறுவ தற்கான வாய்ப்பு இல்லை என் பது உறுதியாகிவிட்ட நிலையில் நீட் தேர்வு யாருக்காக நடத்தப்படுகிறது? 


தமிழகத்தில் உள்ள ஒடுக்கப் பட்ட, பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மாணவர்கள், நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு மருத்துவக் கல்லூரி களில் சேர வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் நடப்பாண்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் கோரிக்கை இதுவாகத் தான் இருக்க முடியும். 


இந்தத் தேர்வை ரத்து செய்யா விட்டால் எத்தகைய போராட்ட வழிமுறைகளை கையாள்வது என்பது குறித்து விரைவில் முடிவெடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment