We Give Everything First

Sunday, July 26, 2020

மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்புகளில் 27% இடஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்



மத்திய அரசின் கல்வி, வேலை வாய்ப்புகளில் 27 சதவீத இடஒதுக் கீட்டை முழுமையாக செயல் படுத்த வேண்டும் என திமுக தலை வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி யுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: 


நீண்ட நெடுங்காலமாக இடை யறாது போராடி பெறப்பட்ட, மத்திய அரசு கல்வி, வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட் டோருக்கான 27 சதவீத இடஒதுக் கீட்டை எப்படியும் ஒழித்தே தீருவது என்று மத்திய பாஜக அரசு செயல் படுவது அதிர்ச்சி அளிக்கிறது. 


கல்வியிலும், வேலைவாய்ப் பிலும் அடியோடு புறக்கணிக்கப் பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு மண்டல் கமிஷன் அளித்த பரிந்துரை, அவர்களின் எதிர்கால முன்னேற்றத்துக்கான திறவுகோலாகவும், அந்த இட ஒதுக்கீட்டை உறுதிசெய்து உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு, இருளைப் போக்கும் ஒளிக் கதிராக வும் அமைந்தது. 


ஆனால், அதில் கிரீமிலேயர் என்று ஒரு தடைக் கல்லை ஏற்படுத்தி, இடஒதுக்கீட் டில் இருந்து பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை விலக்கி வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதை முற்றாகவே நீக்க வேண்டும் என திமுக தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது.
நிகர சம்பளத்தை எடுத்துக் கொண்டு கிரீமிலேயர் வரு மானத்தை கணக்கிடுவோம் என்று துடிப்பது, சமூகநீதிக்கு எதிரானது. அரசியல் சட்டத்துக்கு புறம்பானது. 


27 சதவீத இடஒதுக்கீட்டின் பயனை அடைவதற்கு கிரீமிலேயர் தடையாக இருக்கிறது என்று மத்திய அரசுக்கு 2015-ல் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தெளிவாக பரிந்துரை வழங்கியது. ஆனாலும் சட்டபூர்வமான இட ஒதுக்கீட்டின் மீது மத்திய அரசு நடத்தும் அநியாயமான தாக்கு தலை நாடு முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாயம் நீண்ட நாட்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்காது.

 
எனவே, மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்புகளில் 27 சதவீத இடஒதுக்கீட்டை முழுமை யாக செயல்படுத்தவும், கிரீமிலே யர் வருமான வரம்பை ரத்து செய்ய வும் பிரதமர் மோடி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment