We Give Everything First

Sunday, July 19, 2020

ஐஐடி சேர்க்கையில் பிளஸ் 2 மதிப்பெண் அவசியமில்லை




கரோனா பாதிப்பால் ஐஐடி மாணவர் சேர்க்கையில் பிளஸ் 2 மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 


இதுகுறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச் சர் ரமேஷ் பொக்ரியால் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘நம்நாட்டில் பல்வேறு மாநிலங்களில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டதால் ஐஐடி மாணவர் சேர்க்கைக்கு ஜேஇஇ நுழைவுத்தேர்வு மட்டுமே தகுதி யாக எடுத்துக் கொள்ளப்படும்.


மாணவர்கள் பிளஸ் 2 வகுப்பில் பெற்ற தேர்ச்சியை மட்டும் கருத்தில் கொள்ளுமாறு விதிகள் மாற்றப்பட்டுள்ளன’’என்று குறிப் பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment