We Give Everything First

Sunday, July 19, 2020

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய  மாணவர்களின் எண்ணிக்கையில் முரண்பட்ட தகவல் தேர்வுத் துறை மீது ஆசிரியர்கள் குற்றச்சாட்டு




பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர் களின் எண்ணிக்கை விவர அறி விப்பில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 


தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வு முடிவு கள் இம்மாதம் 16-ம் தேதி வெளி யிடப்பட்டது. மொத்தம் 7.9 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதில் 92.3 சதவீத பேர் தேர்ச்சி பெற்ற னர். இந்நிலையில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பாக தேர்வுத் துறை வெளியிட்ட தகவல்கள் முரண்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. 


இதுகுறித்து அரசுப்பள்ளி ஆசிரி யர்கள் சிலர் கூறியதாவது: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீட் டின்போது அதுதொடர்பான புள்ளி விவரப் பகுப்பாய்வு அறிக்கையை தேர்வுத் துறை வெளியிடுவது வழக்கம். அதில் தேர்வு எழுதிய வர்களின் எண்ணிக்கை மற்றும் தேர்ச்சி வீதம், மாவட்ட வாரியான தேர்ச்சிப் பட்டியல் உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக் கும். 


அதன்படி, தற்போது வெளி யான பகுப்பாய்வு அறிக்கையில் பிளஸ் 2 தேர்வு எழுத பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர் களாக பதிவு செய்தவர்கள் எண் ணிக்கை 7 லட்சத்து 99,717 என கூறப்பட்டுள்ளது. அதேநேரம் பிளஸ் 2 தேர்வு தொடங்கும் முன் கடந்த பிப்.27-ல் தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பில் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களாக 8 லட்சத்து 20,567 பேர் தேர்வெழுத உள்ளதாக தெரிவித்துள்ளது.
இவ்விரண்டு தகவல்களுக்கு இடையேயான மாணவர்கள் எண் ணிக்கையில் 20,850 வரை வித்தியா சம் ஏற்படுகிறது. இதனால் அந்த மாணவர்கள் நிலை குறித்து கேள்வி கள் எழுகின்றன. 


அதேபோல், பிப்.27-ல் வெளி யிடப்பட்ட அறிவிப்பில் சென்னை யில் இருந்து மொத்தம் 47,264 மாணவர்கள் தேர்வு எழுதவுள்ள தாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஜூலை 16-ல் வெளியான அறிக்கையில் 45,646 பேர் மட்டுமே தேர்வு எழுதியதாக கூறப்பட்டுள் ளது. அப்படியெனில் 1,618 பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என கல்வித்துறையே ஒப்புக்கொள் கிறது. 


தலைநகரிலேயே 1,618 மாண வர்கள் தேர்வெழுதாமல் இருப்ப தற்கான காரணமும் சந்தேகங் களை எழுப்புகிறது. இவ்வாறு தேர்வுத் துறை வெளியிட்ட மேற் கண்ட அறிவிப்புகளில் இடம்பெற் றுள்ள தகவல்களில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை உரிய விசாரணை நடத்த வேண் டும். இந்த தகவல்கள் சரியாக இருக்கும்பட்சத்தில் விண்ணப் பித்த மாணவர்கள் தேர்வு எழுதா மல் இடைநிற்பதற்கான கார ணத்தை அரசு கண்டறிந்து நட வடிக்கை எடுக்க வேண்டும். 


ஏற்கெனவே மேல்நிலை வகுப்பு களில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து சரிந்து வருகிறது. எனவே, இந்த விவகாரத்தை கல்வித்துறை எளிதாக கடந்து விடக்கூடாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment