
கல்லூரி பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மதிப்பெண் வழங்கும் வழிமுறை கள் குறித்து உயர்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக உயர்கல்வித் துறை செயலாளர் அபூர்வா வெளியிட்ட அரசாணையில் கூறப் பட்டிருப்பதாவது:
பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில் நுட்பக்கல்வி குழும வழிகாட்டு தலின்படி மதிப்பெண் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் படி,சென்ற பருவத்தில் மாணவர் கள் பெற்ற புற மதிப்பீட்டு மதிப் பெண்களில் இருந்து 30 சதவீதமும், நடப்பு பருவத்தின் அக மதிப்பீடு அல்லது தொடர்ச்சியான அக மதிப்பீட்டில் இருந்து 70 சதவீத மதிப்பெண்களையும் கணக்கில் எடுத்து 100 சதவீத மதிப் பெண்களுக்கு கணக்கிடப்படும். இவ்வாறே முதன்மை மற்றும் மொழிப் பாடங்களுக்கு மதிப் பெண் அளிக்கப்படும்.
துணைப்பாடங்கள் மற்றும் விருப்பப் பாடங்களுக்கு 100 சதவீதம் அக மதிப்பீட்டின் அடிப் படையில் மதிப்பெண்கள் அளிக் கப்படும். செயல்முறை தேர்வு நடத்தப்படாமல் இருந்தால் ஆய் வக பதிவேட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும்.
மாணவர்கள் இதற்கு முந்தைய பருவத்தில் தேர்ச்சி பெறாமல் இருந்தால் அத்தேர்வுகளைப் பின்னர் எழுதவேண்டும். தொலை தூரக் கல்வியைப் பொறுத்தவரை இதே நடைமுறையே பின்பற்றப் படும். தொலைதூரக் கல்வியில் அக மதிப்பீடு இல்லாத இடங் களில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்கப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும்.
இந்த மதிப்பீட்டு முறையில் உடன்பாடு இல்லாத மாணவர்கள் பின்னர் நடத்தப்படும் தேர்வில் பங்குபெற்று தங்களின் மதிப் பெண்களை உயர்த்திக் கொள்ள லாம். மேலும், கரோனா பரவலின் கடினமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மதிப்பெண் கள் குறைவாக உள்ள மாணவர் களுக்கு கருணை முறையில் மதிப்பெண்கள் அளித்து தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும். இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment