
✔கரோனா ஊரடங்கால் பள்ளி கள் மூடப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள் எப்போது திறக்கப்பட் டாலும் முதல் நாளன்றே பாடப் புத்தகங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை செய்து வருகிறது. அதன்படி 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான புத்த கங்கள் ஏற்கெனவே அனைத்து பள்ளிகளையும் சென்றடைந்து விட்டன.
✔இதற்கிடையே, முதல்கட்டமாக 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதை யொட்டி, பாடப்புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கும்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு முறைகளை பள்ளிக்கல்வித்துறை கடந்த வாரம் வெளியிட்டது.
✔பாடப் புத்தகங்கள் வாங்க வரும் மாணவர்களும், பெற் றோரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் பள்ளி வளாகத்தில் சமூக இடை வெளியைக் கடைபிடிக்கு மாறும் அறிவுறுத்தப்பட்டது. ☑ முதல்வர் தொடங்கிவைக்கிறார் ☑
✔இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் திட் டத்தை முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இன்று தொடங்கிவைக்கிறார். இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் முதல்கட்டமாக 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவ,மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் நாளை முதல் அந்தந்த பள்ளிகளில் விநியோகிக் கப்பட உள்ளன. ✔கூடுதலாக பிளஸ் 2 மாணவர்களுக்கு அவர் களின் மடிக்கணினியில் வீடியோ பாடங்களும் பதிவேற்றம் செய்து கொடுக்கப்பட உள்ளன.
No comments:
Post a Comment