We Give Everything First

Tuesday, July 14, 2020

மாணவர்களுக்கு சத்தான உணவு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

✔பள்ளிகளுக்கு விடு முறை விடப்பட்டுள் ளதால், மதிய உணவு திட்டத்தில் பயனடையும் குழந்தைகளுக்கு, சத்தான உணவுகளை வழங்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த, வழக்கறிஞர் ஆர்.சுதாதாக்கல் செய்த மனு:
ஊரடங்கு உத்தரவால், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இத னால், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவு கிடைப்பது இல்லை . இந்த நேரத்தில், அவர்களுக்கு சத்தான உணவு கிடைக்க வேண்டும்.
அதனால், குழந்தை களின் வீடுகளுக்கே சென்றோ அல்லது ரேஷன் கடைகளில் சத்தான உண வுப்பொருள் வழங்கவோ ஏற்பாடு செய்யலாம்.சென்னையில், 200 இடங்கள் உட்பட, தமிழகம் முழுதும், 407 இடங்களில், 'அம்மா ' உணவகங் கள் உள்ளன.இந்த உணவகங்களி லும், சைவ உணவு மட்டுமே வழங்கப்படுகிறது. இங்கு முட்டை வழங்க பரிசீலிக்கலாம்.
இதனால், பொது மக் களுக்கும் சத்தான உணவு கிடைக்கும்.எனவே, மதிய உணவு திட்டத்தில் பயனாளிக ளாக உள்ள மாணவர்களுக்கு, சத்தான உணவு வழங்கவும், 'அம்மா ' உணவகத்தில் முட்டை உள்ளிட்ட சத்துணவு வழங்கவும், திட்டம் வகுக் கும்படி அரசுக்கு உத்தர விட வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதிகள் எம். எம்.சுந்தரேஷ், ஹேம லதா அடங்கிய, 'டிவி ஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது.மனுவுக்கு பதில் அளிக்க, தமிழக அர சுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, 20ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

No comments:

Post a Comment