We Give Everything First

Wednesday, June 3, 2020

10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க கோரிய மனுவை தள்ளுபடி


10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது 
ஐகோர்ட் மதுரை கிளை




தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15ம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுள் செய்யப்படும் என்று அரசு கூறி உள்ளது.


இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்கக் கோரி தென்காசியைச் சேர்ந்த மாணவரின் தந்தை கனகராஜ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது.


விசாரணையின் முடிவில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்கும்படி உத்தரவிட முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


‘பொதுத்தேர்வு மீண்டும் தள்ளிப்போனால் மாணவர்களுக்கு மன அழுத்தம் மேலும் அதிகரிக்கும். சென்னை, திருவள்ளூரில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. பிரச்சினையின் தன்மையை அறிந்தே தேர்வு முடிவை அரசு வெளியிட்டிருக்கும். 


எனவே, தேர்வு நடத்தும் அரசின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது’ என்றும் நீதிபதிகள் கூறினர்.

No comments:

Post a Comment