தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?- அமைச்சர் செங்கோட்டையன் பதில்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது-
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும். பொதுத்தேர்வுகள் முடிந்த பின்னரே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும்.
மேலும் பெற்றோர்கள், கல்வியாளர்களுடன் ஆலோசனை செய்த பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும்.
பாடங்களை குறைப்பது குறித்தும் நிபுணர் குழு ஆலோசித்து வருகிறது.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
No comments:
Post a Comment