We Give Everything First

Sunday, October 4, 2020

ரூ.50,000க்கு மேல் காசோலை செலுத்த புதிய விதி? ரிசர்வ் வங்கி அறிவிப்பு என்ன? எப்போது முதல்?

 ரிசர்வ் வங்கி தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. அதன்படி சமீபத்தில் ரிசர்வ் வங்கி ஆனது ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது, அது என்னவென்றால், காசோலையை செலுத்துவதற்கு ஜனவரி 1, 2021 முதல் 'பாசிட்டிவ் பே சிஸ்டம்'

என்ற முறையை அறிமுகப்படுத்தவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


முதலில் பாசிட்டிவ் பே சிஸ்டம் மூலம் ரூ.50,000-க்கு மேலும் உள்ள பேமெண்ட்களுக்கு முக்கிய விவரங்களை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கணக்கு வைத்திருப்பவரின் விருப்பப்படி இதை செய்ய வேண்டும்.


அடுத்து ரூ.5 லட்சத்துக்கு மேல் பணம் செலுத்துவோருக்கு இந்த முறையை வங்கிகள் கட்டாயமாக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காசோலை வழங்குபவர், பாசிட்டிவ் பே சிஸ்டத்தின் கீழ் தமது குறைந்தபட்டச விவரங்களான தேதி, பயனாளியின் பெயர், பணம் செலுத்துபவர் விவரம், உள்ளிட்டவற்றை மின்னணு முறையில் எஸ்எம்எஸ், மொபைல், இணைய சேவை அல்லது ஏடிஎம் மூலம் வழங்கவேண்டும் என்று கூறப்படுகிறது.


மேலும் இந்த விவரங்கள் அனைத்தும் காசோலையைச் செலுத்தி பணம் பெறும் முன்னர் சரிபார்க்கப்படும், பின்பு சி.டி.எஸ் (cheque truncation system) மூலம் பயனர் தங்கள் வங்கியை அணுகினால் நிவாரண நடவடிக்கைகள் எடுக்கப்படும்.


பின்பு இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (என்.பி.சி.ஐ) சி.டி.எஸ்ஸில் பாசிட்டிவ் பே சிஸ்டத்தை உருவாக்கி வங்கிகளுக்கு அதைக் கிடைக்கச் செய்யும். குறிப்பாக ரூ.50,000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகைகளுக்கான காசோலைகளை வழங்கும் அனைத்து கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் இதை நடைமுறைப்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.



வங்கிகளில் விளம்பரம் செய்தல், எஸ்எம்எஸ், போன்றவை வழியாக இந்த முறை குறித்து வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களிடையே போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.



இந்த பாசிட்டிவ் பே சிஸ்டத்தில் எழும் புகாரை சி.டி.எஸ் க்ரிட் மூலம் தீர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது, ஆனாலும்சி.டி.எஸ்-க்கு வெளியே தீர்க்கப்பட்ட மற்றும் சேகரிக்கப்பட்ட காசோலைகளுக்கு இதே போன்ற ஏற்பாடுகளை செயல்படுத்த வங்கிகள் நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment