We Give Everything First

Sunday, August 2, 2020

“கொரோனா சிகிச்சை கட்டண விபரம் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட வேண்டும்”… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!

ஒரு பக்கம் கொரோனவால் நாடே ஸ்தம்பித்துக் கொண்டிருக்க மறுபக்கம் தனியார் மருத்துவமனைகளின் பில்லை பார்த்து கொரோனா நோயாளிகள் அதிர்ச்சியடைந்து வருகின்றனர்.


சமீபத்தில் கூட சென்னையில் கொரோனா சிகிச்சைக்கு ரூ.5 லட்சம் கட்டணம் என்று கூறிவிட்டு ரூ.16 லட்சம் கேட்ட தனியார் மருத்துவமனை மீது தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து கொரோனா சிகிச்சை அனுமதி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. பின்னர் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்தது.



எனவே முதலைமைச்சர் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “கொரோனா சிகிச்சை வழங்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண விவரம் தெளிவாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட வேண்டும். கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் பெறப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment