We Give Everything First

Sunday, August 2, 2020

பள்ளி திறப்பு குறித்து பெற்றோரிடம் கருத்துகேட்பு



கரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பள்ளிகள் திறப்புக்கு ஆகஸ்ட் 31 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையில் அரசு பள்ளி களில் மாணவர் சேர்க்கை குறித்து முடிவு எடுக்க வேண் டிய அவசியம் தற்போது ஏற்பட் டுள்ளது. இதற்காக, பெற்றோ ரின் விருப்பத்தை கேட்டறிய பள்ளிக்கல்வித் துறை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் பெற்றோரிடம் கருத்து கேட்டு அறிக்கைத் தர தெரிவித்துள்ளது.


இதைத் தொடர்ந்து பெற் றோரிடம் கருத்துகேட்கும் பணி செங்கல்பட்டு, காஞ்சி மாவட்டங் களில் தொடங்கப்பட்டுள்ளது.


எழுத்துபூர்வமாக..

இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களும், மாணவர் களின் பெற்றோரிடம் எழுத்து பூர்வமாக கருத்தைப் பெற்று தொகுத்து, வட்டார கல்வி அலு வலர்களிடம் (டிஇஓ) ஒப்ப டைக்க வேண்டும். வகுப் புக்கு 2 முதல் 5 பெற்றோர் வீதம் கருத்துகள் கேட்கப்பட்டு, அதன் இறுதி அறிக்கையை முதன்மை கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.


இதுகுறித்து சில பெற்றோ ரிடம் தொலைபேசியில் கேட்ட போது, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டப் பகுதிகளில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிற நிலை தொடர்ந்து இருந்து வருவதால் பள்ளிகளைத் திறக்க வேண்டாம் என்றும் ஆன் லைன், தொலைக்காட்சி மூலம் வகுப்பு நடத்தவும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


மேலும் ஒருநாள் விட்டு ஒருநாள் ஒரு வகுப்பில் 15 முதல் 20 மாணவர்கள் மட்டும் அமரும் வகையில் பள்ளி நடத்த லாம். பள்ளிப் பேருந்துகளை அனு மதிக்கக் கூடாது என பலர் கருத்து தெரிவித்துள்ளனர் என்றார்.

No comments:

Post a Comment