We Give Everything First

Tuesday, June 2, 2020

10 ஜிபி இலவச டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ



ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டாவினை இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளது. இலவச டேட்டா நாள் ஒன்றுக்கு 2 ஜிபி வீதம் ஐந்து நாட்களுக்கு வழங்கப்படுகிறது.


முன்னதாக இதேபோன்ற சலுகையை ஏப்ரல் மாதத்திலும் ரிலையன்ஸ் ஜியோ அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இதுதவிர ரிலையன்ஸ் ஜியோ வொர்க் ஃபிரம் ஹோம் ஆட்-ஆன் சலுகை பலன்களை மாற்றியமைத்து 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கியது. 

முன்னதாக ஆட்-ஆன் சலுகை வேலிடிட்டி வாடிக்கையாளர்கள் தேர்வு செய்த பேஸ் பிளான் வேலிடிட்டி இருக்கும் வரை வழங்கி வந்தது.


புதிய சலுகையின் கீழ் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 10 ஜிபி கூடுதல் டேட்டா இலவசமாக கிடைக்கும். இலவச டேட்டா சலுகை கூடுதலாக வழங்கப்படுகிறது. 

அந்த வகையில் பயனருக்கு வழங்கப்பட்டுள்ள அன்றாட டேட்டா தீர்ந்ததும், கூடுதல் டேட்டாவினை பயன்படுத்திக் கொள்ள முடியும். 


இலவச டேட்டா வழங்கப்பட்டுள்ளதை பயனர்கள் மைஜியோ செயலியின் மை பிளான்ஸ் பகுதிக்கு சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம். இங்கு பயனரின் தற்போதைய சலுகை விவரங்களின் கீழ் இலவச டேட்டா வழங்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ள முடியும்.

No comments:

Post a Comment