We Give Everything First

Sunday, July 19, 2020

நீட் தேர்வு அல்லாத படிப்புகளில் சேர புதுவையில் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்




புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
2020-21-ம் கல்வி ஆண்டில் நீட் அல்லாத பொறியியல், பாலிடெக்னிக், சட்டம் உள்ளிட்ட தொழில்முறை படிப்புகள் மற்றும் இளங்கலை படிப்புகளில் சேர்ந்து பயில்வதற்கான விண்ணப்பங்கள் சென்டாக் மூலம் நாளை (ஜூலை 20) முதல் ஆன்லைன் முறையில் வழங்கப்பட உள்ளது. 


கல்லூரிகள் தொடங்குவதற்கு முன்பே அனைத்து விதமான பாடப்பிரிவுகளுக்கான சேர்க்கை யையும் இம்மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 


ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்க மேல்நிலைப் பள்ளி களில் உள்ள ஐசிடி லேப் பணி யாளர்கள், கணினி பயிற்றுநர்கள் உதவி செய்வார்கள். விண்ணப்ப கட்டணத்தை ரத்து செய்வது குறித்து முதல்வரிடம் பேசி அறிவிப்போம். கல்லூரி திறப்பு பற்றி பின்னர் முடிவு எடுக்கப்படும்.


காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் சென் டாக் மேற்பார்வையில் கல்லூரி களே சேர்க்கையை நடத்திக் கொள்ளும். அந்தப் பிராந்தியங் களில் கல்லூரிகளில் சேர நேரடி யாக விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் புதுச்சேரியில் உள்ள கல்லூரிகளில் படிக்க விரும்பி னால் ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம்.


அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகளில் 2016-17-ல் 3,858 இடங்களே இருந்தன. கடந்த காலங்களில் அது 6,620 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரி பொறியியல் கல்லூரியை தொழில் நுட்ப பல்கலைக்கழகமாக உயர்த்த, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்றார்.அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுக்குப் பதில் பணம்


கரோனா ஊரடங்கில் ஆன்லைன் வசதி கிடைக்காத ஏழை மாணவர்களுக்காக தமிழக அரசு தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளது. புதுச்சேரி மாணவர்கள் அதில் பலனடைய உள்ளூர் தொலைக்காட்சிகளில் அதை ஒளிபரப்ப எம்.எஸ்.ஓ.க்கள் மற்றும் கேபிள் டிவி நிறுவனங்களுக்கு ஆட்சியர்கள் மூலம் கடிதம் அனுப்பப்பட உள்ளது. மேலும் புதுச்சேரி பள்ளி கல்வி இயக்ககம் சார்பாகவும் பாட நிகழ்ச்சிகள் தயாரித்து வழங்கப்பட உள்ளது.


அரசு பள்ளி மாணவர்களுக்கு இதுவரை வழங்கப்படாத மதிய உணவுக்கு பதிலாக 4 கிலோ அரிசி மற்றும் பிற பொருட்களுக்கான பணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 4 கிலோ அரிசியுடன் ரூ.250 வழங்கப்படும். 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 4 கிலோ அரிசியுடன் ரூ.330 வழங்கப்படும் என்றும் கல்வியமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment