
கரோனா தொற்றை துல்லியமாக கண்டறியும் புதிய கருவியை காரக்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர் கள் குழு வடிவமைத்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்று பாதிப்பைக் கண்டறிய தற்போது ஆர்டி-பிசிஆர் கருவி பயன்படுத்தப்படுகிறது. இதன் விலை அதிகமாக இருப்பதுடன், இவற்றை கையாள்வதிலும் பல் வேறு சிரமங்கள் உள்ளன. இதற்கு மாற்றாக துல்லிய தன்மையுடன் கரோனா முடிவுகளை தெரிவிக்கும் புதிய கருவியை காரக்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டுபிடித்துள்ளது.
இந்தக் கருவியால் கரோனா வைரஸ் தொற்றை துல்லியமாக உறுதிசெய்ய முடியும். இதை கையாள்வதும் எளிது. அதனால் குறைந்த பயிற்சி பெற்ற பணியாளர் கள்கூட இதை பயன்படுத்த முடி யும்.
பரிசோதனைக்கு ரூ.400 மட்டுமே.
இதன்மூலம் எடுக்கப்படும் பரிசோதனைக்கு மிக குறைவாக ரூ.400 வரையே செலவாகும். மேலும், அதிகபட்சம் ஒருமணி நேரத்தில் சோதனை முடிவுகளை பெறலாம். இதை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான முயற்சி கள் எடுக்கப்பட்டுள்ளதாக காரக் பூர் ஐஐடி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment